ETV Bharat / state

மாணவர்களை போராட வைப்பது கண்டனத்துக்குரியது - சீனிவாசன் காட்டம் - Srinivasan condemns BJP state secretary for Virudhunagar

விருதுநகர்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்களை போராட வைப்பது கண்டனத்துக்குரியது என பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேட்டி
பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேட்டி
author img

By

Published : Feb 4, 2020, 10:19 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 30ஆம் தேதியன்று பள்ளி மாணவிகளை மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வைத்த திமுக, அதன் கூட்டணி கட்சியினர், பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் கண்டனங்களை பதிவுசெய்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பாஜக பறிக்கப் போவதாக பொய் சொல்லி நாடு முழுக்க பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர். உண்மையை தெரிந்து கொண்ட பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதால் போராட்டத்துக்கு பள்ளி குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். இச்செயலை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேட்டி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த உணர்வுகளை உடைத்து ஒரு இந்துவாக பேசியுள்ளார். இந்துவாக பேசுவது மற்றொரு மதத்துக்கு எதிராக பேசுவது அல்ல. அவர் எந்த மதத்தையும் எதிர்த்து பேசவில்லை, நாங்களும் பேசவில்லை. எங்கள் மதத்தை புண்படுத்துகின்ற உரிமை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அதிமுக - பாஜக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி. தேர்தலில் ஓட்டுக்களை சிதற விடக்கூடாது, எதிரிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம்," இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: பாஜகவின் மாநில தலைவர் யார்? - பதில் சொல்ல மறுக்கும் வானதி சீனிவாசன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 30ஆம் தேதியன்று பள்ளி மாணவிகளை மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வைத்த திமுக, அதன் கூட்டணி கட்சியினர், பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் கண்டனங்களை பதிவுசெய்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பாஜக பறிக்கப் போவதாக பொய் சொல்லி நாடு முழுக்க பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர். உண்மையை தெரிந்து கொண்ட பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதால் போராட்டத்துக்கு பள்ளி குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். இச்செயலை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேட்டி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த உணர்வுகளை உடைத்து ஒரு இந்துவாக பேசியுள்ளார். இந்துவாக பேசுவது மற்றொரு மதத்துக்கு எதிராக பேசுவது அல்ல. அவர் எந்த மதத்தையும் எதிர்த்து பேசவில்லை, நாங்களும் பேசவில்லை. எங்கள் மதத்தை புண்படுத்துகின்ற உரிமை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அதிமுக - பாஜக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி. தேர்தலில் ஓட்டுக்களை சிதற விடக்கூடாது, எதிரிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம்," இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: பாஜகவின் மாநில தலைவர் யார்? - பதில் சொல்ல மறுக்கும் வானதி சீனிவாசன்

Intro:விருதுநகர்
03-02-2020

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகளை மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு பங்கேற்க வைத்தது கண்டனத்திற்குரியது - பிஜேபி மாநில செயலாளர் சீனிவாசன் பேட்டி

Tn_vnr_06_bjp_srinivasan_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த (30.01.20 ) தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகளை மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு பங்கேற்க வைத்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்,பள்ளி மற்றும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிஜேபி மாநில செயலாளர் சீனிவாசன் கண்டனங்களை பதிவு செய்தார் தொடர்ந்து பேசியவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசியவர். இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம் வந்தது ராஜ்யசபாயிலும் லோக்சபாயிலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவளித்து அது சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரை திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் செயற்கையாக தூண்டிவிட்டு பொய் பிரச்சாரம் செய்து இஸ்லாமியர்களின் குடியுரிமையை பரிக்கப் போவதாக பொய் சொல்லி நாடு முழுக்க பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். உண்மையை தெரிந்து கொண்ட பொதுமக்கள் ஆதரவு இல்லை என்ற காரணத்தால் பொதுமக்களின் ஆதரவு தொடர்ந்து குறைந்து கொண்டே இருப்பதால் அவர்களிடம் சென்று பிஜேபியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் பொதுமக்களுக்கு நாங்கள் விளக்க தோன்றிய காரணத்தால் எதிர்க்கட்சியினருக்கு போராட்டம் நடத்துவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை இதனால் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை தூண்டி விட்டு மத்திய அரசுக்கு எதிராக நடத்துகின்ற போராட்டத்திற்கு பள்ளி குழந்தைகளை பயன்படுத்துகிற நிலை தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் இங்கு நடந்த போராட்டத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்துகின்ற பள்ளி அதனுடைய மாணவிகளை மனிதச்சங்கிலி என்ற பெயரில் ஒரு ஓரத்தில் நிறுத்தி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட வைத்திருக்கிறார்கள் இதை பிஜேபி கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசியல் கட்சிகள் அரசுக்கு எதிராக ஆயிரம் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உண்டு அதற்காக பள்ளி மாணவர்களை பயன்படுத்துவது என்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. காமராஜர் கல்லூரி மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்க கூடாது என்று சொன்னவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அரசுக்கு எதிராக நிற்க வைப்பது இது நடுநிலையாளர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் செயல் கிடையாது. இதை கண்டிக்க வேண்டும் அந்த பள்ளி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவின் அமைச்சர்கள் பிஜேபிக்கு ஆதரவாகவும் கருத்துகளை பேசுகின்றார்கள் என்று பார்க்க வேண்டாம் தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய ஆதங்கம் இருக்கிறது திமுக மாதிரியான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்து விரோத போக்கை கண்பித்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரின் வாக்கு வங்கி சுலபமாக கிடைக்கின்ற காரணத்தால் பெரும்பான்மை சமுதாயம் சாதி ரீதியாக பிளவுபட்டு இருக்கின்ற காரணத்தால் அதை பயன்படுத்திக் கொண்டு இந்து உணர்வை தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் கலைஞர் முதலமைச்சராக இருந்ததில் இருந்து ஸ்டாலின் அவர்களும் தற்போது தொடருகிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்களை பிஜேபி சார்பாக முழு மனதோடு வரவேற்கிறோம் ஆதரிக்கிறோம் அவர் ஒரு இந்து உணர்வாளராக பேசியிருக்கிறார். இந்து உணர்வாளர்கள் அமைச்சராகவும் அதிமுகவில் இருக்கக் கூடாதா தங்களை பொறுத்தவரையில் எல்லா கட்சிகளிலும் இந்து உணர்வாளர்கள் இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறோம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த உணர்வுகளை உடைத்து ஒரு இந்துவாக பேசியுள்ளார் இந்துவாக பேசுவது மற்றொரு மதத்திற்கு எதிராக பேசுவது அல்ல அவர் எந்த மதத்தையும் எதிர்த்துப் பேசவில்லை நாங்களும் பேசவில்லை எங்கள் மதத்தை புண்படுத்துகின்ற உரிமை திமுக,காங்கிரஸ்,
கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது மைன்னாரட்டி திமுக என்று சொல்லி கொண்டு இருப்பார்கள் தற்போது மைனாரிட்டி ஓட்டு போதுமென்று சொல்லுகின்ற திமுக மாறி இருக்கிறது.

அதிமுக பிஜேபி கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி. தேர்தலில் ஓட்டுக்களை சிதற விடக்கூடாது எதிரிகளை வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக ஏற்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் தேர்தல் முடிந்தவுடனும் கூட்டணி தொடரும் கட்சியின் கொள்கையின்படி அவர் அவர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். எங்களுக்கு அண்ணா திமுகவுடன் நட்பு தொடர்கிறது வருகின்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் அது தொடர வேண்டும் என்று விரும்புகிறோம் அதை காலம் முடிவு செய்யும்.

டெல்லியில் எஸ்சி கமிஷனில் கொடுத்த புகார் குற்றம் செய்ததற்காக அல்ல உண்மை நிலையை தெரியபடுத்துவதற்காக கொடுத்த மனு முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது நான் எந்த குற்றச்சாட்டையும் எழுப்பவில்லை தமிழ்நாட்டில் அதைப்பற்றிய விவாதங்கள் இருக்கிறது முக்கிய அரசியல் தலைவர்கள் சொல்கிறார்கள் மக்களுக்கும் அதில் தெளிவில்லை திமுகவும் நிரூபிக்கவில்லை அதனால் எஸ்சி கமிஷன் இதில் தலையிட்டு உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது மனுவின் அடிப்படை.


திமுகவிலிருந்து எஸ்சி கமிஷன் தலையிடக்கூடாது என்றும் உரிமையில்லை என்றும் சொன்னார்கள். தன் மீதும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் மீதும் அவதூறு வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.

தற்போது வாடகை கட்டடத்தில் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற செய்தி வந்திருக்கிறது அது உண்மையா அல்லது பொய்யா திமுக தரப்பில் இருந்து தான் தெளிவுபடுத்த வேண்டும்.

பிஜேபியின் கொள்கைகளை ஆதரித்து பேசுகிறார் அதனால் ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் திமுக ஸ்டாலின் மனு கொடுத்திருக்கின்றார். ஆளுநர் நடுநிலையோடு செயல்படுகின்றவர், நேர்மையாளர் அரசியல் அனுபவம் உள்ளவர் இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை என்ன என்று ஆளுநர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.