விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவையானது மார்கழி மாதத்தில் இயற்றப்பட்டதாகும்.
இதனால் மற்ற பகுதிகளை விட ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு தங்கத்தால் நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடத்தில் அசத்தும் ஆசிரியர்