விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அமுகவூர் பகுதியில் வசித்து வந்தவர் சாமிநாதன் (75) . இவரது மகன் சங்கர் (33) வெளியில் கடன் வாங்கி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதை அறிந்த சுவாமிநாதன், மது போதையில் வந்த மகனை கண்டித்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஒரு கட்டத்தில் மகன் சங்கர், தந்தையின் தலையில் கல்லை கொண்டு தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த சுவாமிநாதனை, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தளவாய்புரம் காவல்துறையினர், சங்கரை கைது செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.