விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் காவல் நிலைய ஆய்வாளராக முத்துப்பாண்டி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். இந்நிலையில், காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது அலைபேசிக்கு தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், பெண் காவலர் ஒருவர், சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாத்திடம் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.