விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வெற்றிலைமுருகன்பட்டி சாலையில் உள்ள முட்புதருக்குள் 6 வயது சிறுமி உடலில் ரத்தக்காயங்களுடன் அழுதவாறு, நடக்க முடியாமல் தவழ்ந்து வந்துள்ளார்.
அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சிறுமியைக்கண்டு விசாரித்து, உடனே காரியாபட்டி காவல் துறைக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு வந்த காரியாபட்டி காவல் துறை சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பெரியம்மா மகனான மணிகண்டராஜா(31) குளிர்பானம் வாங்கித்தருவதாகக்கூறி, இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார் எனவும் அச்சிறுமி கூறியுள்ளார்.
மதுரையை விட்டு இவ்வளவு தூரமாக வந்ததையடுத்து அண்ணனிடம் கேட்டபோது, அம்மா ஒரு இடம் வாங்கியுள்ளார், அதை பார்த்துவிட்டு வருவோம் என அழைத்துச் சென்றுள்ளார். காரியாபட்டி அருகே ஒரு புதருக்குள் வைத்து பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி, அந்தப் பகுதியில் விட்டுச்சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து காரியாபட்டி காவல் துறையினர் அவனியாபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி இரவு சிறுமி கானவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
உடனே காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர்களை அழைத்து வந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், அந்தச் சிறுமியை பெற்றோர்களுடன் சேர்த்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது பாய்ந்த போக்சோ