ETV Bharat / state

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

விருதுநகர் அருகே கோவில் புலிகுத்தி கிராமத்தில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.

virudhunagar news  virudhunagar latest news  seizer of gutka  election commission  seizer of gutka by election commission in virudhunagar  gutka  local body election  election  விருதுநகர் செய்திகள்  புகையிலை பொருட்கள்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  தேர்தல் பறக்கும் படை  குட்கா பொருள்கள் பறிமுதல்  தேர்தல்  உள்ளாட்சி தேர்தல்
குட்கா
author img

By

Published : Oct 5, 2021, 7:38 AM IST

விருதுநகர்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற நாளையும் (அக். 6), வரும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் விதிமீறல்கள் நடக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக, தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்கள், இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் பலகட்ட நடவடிக்கைகளும், சோதனைகளும் நடத்திவருகின்றனர்.

அந்த வகையில், விருதுநகரில் நேற்று (அக்டோபர் 4) வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முற்பட்டபோது, லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

virudhunagar news  virudhunagar latest news  seizer of gutka  election commission  seizer of gutka by election commission in virudhunagar  gutka  local body election  election  விருதுநகர் செய்திகள்  புகையிலை பொருட்கள்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  தேர்தல் பறக்கும் படை  குட்கா பொருள்கள் பறிமுதல்  தேர்தல்  உள்ளாட்சி தேர்தல்
3 டன் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

புகையிலைப் பொருள்கள்

இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படையினர், லாரியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது கோவில் புலிகுத்தி கிராமத்தில், சங்கிலி கருப்பசாமி என்பவரது வீட்டில், கர்நாடக மாநிலத்திலிருந்து லாரியில் கடத்திவரப்பட்ட, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இறக்கியுள்ளனர்.

இதனைக் கண்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயபாண்டி, சிறப்பு சார்பு ஆய்வாளர் இரணியன், தலைமைக் காவலர் சித்ரா ஆகியோர், அவ்விடத்தில் இறக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட மூன்று டன் குட்கா புகையிலைப் பொருள்களைப் பறிமுதல்செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வச்சகாபட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மூவர் கைது

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வச்சகாபட்டி காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்டிருந்த சங்கலி கருப்பசாமி (30), லாரி ஓட்டுநர்கள் ராமர் (51), மகேஷ் (30) ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து பறிமுதல்செய்யப்பட்ட பொருள்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையும் படிங்க: தவறான அறுவை சிகிச்சையால் பெண் கவலைக்கிடம் - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.