ETV Bharat / state

'பிறந்தநாளில் மரக்கன்று நடுங்கள்' - பசுமை புரட்சிக்கு வித்திட்ட பள்ளி! - government school girls

விருதுநகர்: பிறந்தநாளில் மரக்கன்று நடுவதே முதல் கொண்டாட்டம் என்னும் பழக்கத்தை நகராட்சி பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்துள்ளார்.

green revolution school girls
author img

By

Published : Aug 30, 2019, 2:49 PM IST

மழைக்கு ஆதாரமாக விளங்கும் மரங்கள் இயற்கையின் கொடையாகும். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

பிறந்த நாளில் பள்ளி மாணவிகள் மரம் நடும் பழக்கம்  birthday celebration for planting tree  viruthunagar  government school girls  green revolution
பசுமை புரட்சியில் பள்ளி மாணவிகள்

அந்தவகையில், விருதுநகர் மாவட்டம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவிகளின் தங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பாகமாக மரம் நடுவதை ஒரு முக்கிய நிகழ்வாக நடத்தி வருகின்றனர். இந்த கல்வியாண்டு முதல் பள்ளியில் பசுமை புரட்சியை ஏற்படுத்துவதே தங்கள் இலட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பிறந்தநாளன்று அந்த மாணவியின் கையால் மரக்கன்று நடும் பழக்கத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்துள்ளார்.

பிறந்தநாளில் மரம் நடும் மாணவிகள்

மேலும் காலை, மாலை என இருவேளையும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, தேவையற்ற களைச்செடிகளை அகற்றுவது போன்ற வேலைகளில் மாணவிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பள்ளி வளாகம் தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது.

பொது இடங்கள், சாலை ஓரங்களில் மரக்கன்று நடுவதற்கு நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தால் மாணவிகள் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் - மாணவிகள் கோரிக்கை

இது பற்றி கருத்து தெரிவிக்கும் மாணவிகள், மரங்களை நடுவதற்கு இயலவில்லை என்றாலும், அதனை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Intro:விருதுநகர்
30-08-19

மரம் நடுவதே பிறந்தநாளில் முதல் கொண்டாட்டம். மரத்தை நட முடியாவிட்டாலும் அதை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் - பள்ளி மாணவியின் கோரிக்கை

Tn_vnr_01_school_tree_story_vis_script_7204885Body:மரம்தான் மழைக்கு ஆதாரம் அந்த மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து விருதுநகரில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவிகளின் பிறந்தநாள் அன்று சாதாரண பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு மரம் நடுதலையும் ஒரு முக்கிய நிகழ்வாக நடத்திவருகின்றனர். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் இந்த கல்வியாண்டு முதல் பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளின் பிறந்தநாளன்று அந்த மாணவியின் கையால் மரக்கன்று நடும் பழக்கத்தை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கியுள்ளார். காலை மாலை என இருவேளையும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது மற்றும் தேவையற்ற கலைகளை அகற்றுவது என்ற வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் இந்த பள்ளி வளாகம் தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது. பொது இடங்கள் சாலை ஓரங்களில் மரங்கன்று நட நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தால் மாணவிகள் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் பள்ளி தலைமை ஆசிரியரும் பசுமை படை பொறுப்புகளும் கோரிக்கை வைத்தனர்.

பேட்டி

1. ஸ்ரீவித்யா (பிறந்தநாள் மாணவி)
2. ஜெயஸ்ரீ (தலைமையாசிரியர்)
3. ராஜசேகர் (பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்)
4. பரமேஸ்வரி (பசுமைப்படை குழு)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.