விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குருவட்டம் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் செஸ், கேரம், கூடைப்பந்து, கோகோ மற்றும் கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், மகளிருக்கான 14, 17 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவுகளில் கபடி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 22 மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது 14, 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கபடி இருபிரிவுகளிலும் தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.