விருதுநகர்: சாத்தூர் தாயில்பட்டியிலுள்ள கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா. (25) இவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ராஜா என்பவரின் மனைவி கற்பகவள்ளி (35), அப்பலோ என்பவரது மனைவி செல்வமணி (35), ரஃபியா சல்மான் (5) என்ற சிறுவன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த கற்பகவள்ளியின் உடல் மட்டும் துண்டு துண்டாக சேகரிக்கப்பட்டது. முழுமையான உடல் கிடைக்கவில்லை.
அழுகிய நிலையில் கிடந்த உடல்:
இந்நிலையில், இன்று (ஜூன் 24) அப்பகுதி மக்கள் கலைஞர் காலனி செல்லும் வழியில் துர்நாற்றம் வீசிவதாக கூறி அங்கு தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, வெடி விபத்தில் சிதறிய கற்பகவள்ளி உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை காவல் துறையினர், கற்பகவள்ளி உடலை கைப்பற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து: 5 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு