ETV Bharat / state

சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு - மலையில் மாட்டிக்கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள்!

விருதுநகர் : சதுரகிரி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

sathuragiri rain water issue
author img

By

Published : Sep 30, 2019, 10:58 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் இறுதி நாள் என்பதால் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மாங்கனி ஓடை , சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சதுரகிரி மலைப்பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

இதனால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து மலைப் பகுதியில் உள்ளனர். மேலும்,நீர்வரத்து குறையும் வரை யாரும் இறங்க வேண்டாம் என வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

மின்னல் வேகத்தில் ஓடிய முதியவர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த மாரத்தான்!

Intro:விருதுநகர்
30-09-19

சதுரகிரி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு.
100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிப்பு
Body:கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு.
100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை ,
பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் இறுதி நாள் என்பதால் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மாங்கனி ஓடை , சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சதுரகிரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து மலைப் பகுதியில் உள்ளனர்.
நீர்வரத்து குறையும் வரை யாரும் இறங்க வேண்டாம் என வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.