ETV Bharat / state

முதியவரிடம் ரூ. 3 லட்சம் பறித்த கொள்ளையர்கள்! - latest virudhunagar district news

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டப்பகலில் முதியவரை தாக்கி மூன்று லட்சம் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

roberrs-rob-3-lakh-rupees-from-old-man-in-kariapatti
முதியவரிடம் ரூ. 3 லட்சம் பறித்த கொள்ளையர்கள்!
author img

By

Published : Jul 4, 2021, 10:14 AM IST

விருதுநகர்: காரியாபட்டி அருகே மேல அழகிய நல்லூரைச் சேர்ந்த 72 வயது முதியவர் சொக்கையன். இவர், அரசுப்பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், நேற்று தனது வைப்புத்தொகையில் இருந்து ரூபாய் 4 லட்சத்தை காரியாபட்டி ஸ்டேட் வங்கியில் எடுத்துள்ளார்.

பணத்தை ஒரு துணிப்பையில் வைத்துக்கொண்டு பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரைத் தள்ளிவிட்டு பையை பிடுங்கியுள்ளனர். அப்போது, பையில் இருந்து ஒரு லட்சம் மட்டும் கீழே விழ மீதம் மூன்று லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

முதியவர் கீழே விழுந்த 1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாய ஜோஸ், காரியாபட்டி காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மரக்கடையில் 95 ஆயிரம் ரூபாய் திருட்டு: பரோட்டா மாஸ்டர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.