விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியாப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று, மல்லாங்கிணறு பேரூராட்சியில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதததை கண்டித்த கிராம மக்கள், விருதுநகர் - காரியாபட்டி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.