ETV Bharat / state

விதவிதமான 2020 காலண்டர்: சரக்கு மற்றும் சேவை வரியால் உயரும் விலை! - ஜிஎஸ்டியால் காலண்டர் விலை உயர்வு

விருதுநகர்: 2020ஆம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 calender
2020 calender
author img

By

Published : Dec 31, 2019, 6:49 PM IST

ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டிலும் மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தினசரி காலண்டர்களை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. அதில், முக்கியமாக அரசியல் கட்சியினர், ஜவுளிக் கடைகள், நகைக்கடை, பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இலவசமாகத் தினசரி காலண்டர்களை இலவசமாக வழங்கிவருகின்றனர். இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த நிறுவனத்தின் விளம்பரம் எளிதில் சென்றடைகிறது.

காலண்டர் விற்பனை குறித்து தொழிலாளிகள் கருத்து

தினசரி காலண்டர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டுதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. அதேபோன்று இந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் தினசரி காலண்டர்கள் சிவகாசியில்தான் அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. அந்தந்த நிறுவனங்களுக்குப் பிடித்தவகையில் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு காலண்டர்களும் தயாரிக்கப்படுகின்றன.

வண்ண வண்ணமாக பார்வையாளரைக் கவரும்விதத்திலும் காலண்டர்கள் தயாரிப்பு வேலை நடைபெறுகிறது. தற்போது காலண்டரில்கூட கவர்ச்சித் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம். அதனை முதன்மையாகக் கருத்தில்கொண்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10 பெரிய நிறுவனங்களும் 300-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டிற்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கிவிடும்.

அவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு இந்த ஆண்டிற்குரிய புதிய டிசைன்கள் பார்வைக்கு வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப புதிய மாடல்கள் உருவாக்கப்பட்டு அச்சக உரிமையாளர்கள் காலண்டர் செய்யும் பணியை தொடங்கிவிடுவார்கள். கடந்த ஆண்டைவிட அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்துள்ளபோதும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக் காரணமாக ஏழு விழுக்காடுமுதல் 12 விழுக்காடுவரை விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் 15 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையிலான காலண்டர்கள் தயாரித்துவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடவுள் புகைப்படம், அரசியல் தலைவர்கள், தேசத் தலைவர்கள் படத்துடன் கூடிய ஆர்டர்கள் அதிகமாக இடம்பெறுவது வழக்கம். 2019ஆம் ஆண்டைவிட தொழில்நுட்ப வசதியால் 3டி காலண்டர்களும் அதிகம் தயாரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குதூகலமாய் கொண்டாடும் புத்தாண்டில் தேனிபோல் சுறுசுறுப்பாய் உழைக்கம் சிவகாசி மக்களின் வாழ்வாதாரமும் அடங்கியுள்ளது என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சும் நாளாய் புத்தாண்டு அமையட்டும்.

Intro:விருதுநகர்
31-12-19

ஜி.எஸ்.டி காரணமாக 2020 காலண்டர் விலை ஏற்றம்

Tn_vnr_01_calendar_production_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10 பெரிய நிறுவனங்களும் 300-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்கள் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சிவகாசி உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டிற்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கிவிடும். ஒவ்வொருவருடமும் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு இந்த ஆண்டிற்குரிய புதிய டிசைன்கள் பார்வைக்கு வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப புதிய மாடல்கள் உருவாக்கப்பட்டு அச்சக உரிமையாளர்கள் காலண்டர் செய்யும் பணியை தொடங்கி விடுவார்கள். கடந்த ஆண்டை விட அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்துள்ள போதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

பேட்டி

1. தங்கேஸ்வரி ( காலண்டர் தொழிலாளி)
2. கமல் ( காலண்டர் தொழிலாளி)
3. தினேஷ் ராஜ் (உரிமையாளர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.