விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே வயதான முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த 65 வயது முதியவரை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முதியவர் கொலை செய்யப்பட்டாரா, தானாக இறந்தாரா என பல்வேறு கோணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நகராட்சி அலுவலகம் அருகே தலையில் காயங்களுடன் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட 4 பேர்!