விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டியில் உள்ள ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை சமீபத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், இன்று (மே.22) ராம்கோ சிமெண்ட் நிறுவணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து மெட்ரிக் க்யூப் ஆக்ஸிஜன், லாரியின் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சையளிக்கப்படும்.