ETV Bharat / state

‘நடிகை லதாவுடன் டூயட் பாடும் எம்ஜிஆரைத்தான் தெரியும்’ - ராஜேந்திர பாலாஜி - கேடி ராஜேந்திரபாலாஜி

விருதுநகர்: நடிகை லதாவை தூக்கிச் சென்று டூயட் பாடும் எம்ஜிஆரைத்தான் நமக்குத் தெரியும் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

Tn vnr rajenthira balaji speech  எம்ஜிஆர் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்  கேடி ராஜேந்திரபாலாஜி  சித்து விளையாட்டு ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Jan 24, 2020, 11:45 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘அதிமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்குத் தோல்வி பரிசாகக் காத்திருக்கிறது. அதிமுகவை வீழ்த்துவதற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். நாட்டில் பிரச்னைகளை உருவாக்கும் கட்சி திமுக. யாரும் நன்றாக இருக்கக் கூடாது என்று இனச்சண்டை மதச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அனைவரையும் சண்டை போடவைத்து அதில் திமுக குளிர் காய்கின்றது.

ராஜேந்திர பாலாஜி

ஏழைகளை உயர்த்தி விடுவதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பாடுபடுவோம்.‌ நீங்கள் எங்களுக்கு வாக்கு அளித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி உங்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் அதிமுகவினர்.

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சற்று அடங்கிப்போனோம். அதில், ஒரு சில இடங்களில் திமுகவினர் கொஞ்சம் விளையாடிப் பார்த்தனர். குத்துச் சண்டை, சிலம்பாட்டம் போன்ற பல்வேறு வித்தைகள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கற்றுவைத்துள்ளோம். கழகத்தின் கட்டுப்பாட்டிற்காக அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறோம். திமுகவினர் சண்டைபோட்டு வெற்றிபெற நினைத்தால் எக்காலத்திலும் அதிமுகவை வெற்றி பெற முடியாது’ என்று பேசினார்.

இதையும் படிங்க: 'பெரியார் ஒரு மின்சாரம் தொட்டால் ஷாக்கடிக்கும்' - கி.வீரமணி

Intro:விருதுநகர்
24-01-2020

மதச்சண்டை, இனச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்கின்ற கட்சி திமுக என்று அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.

Tn_vnr_02_rajenthira_balaji_speech_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசிய போது...

அதிமுகவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பரிசாக காத்திருக்கிறது. அதிமுகவை வீழ்த்துவதற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். நாட்டில் பிரச்சனைகளை உருவாக்கும் கட்சி திமுக கட்சி. யாரும் நன்றாக இருக்க கூடாது என்று இனச்சண்டை மதச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அனைவரையும் சண்டை போட வைத்து அதில் குளிர் காய்கின்ற கட்சி திமுக என்று விமர்சித்தார். ஏழைகளை உயர்த்தி விடுவதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பாடுபடுவோம்.‌ குத்து சண்டை சிலம்பாட்டம் போன்ற வித்தைகளை தெரிந்தவர் அதிமுக காரர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டிற்க்காக அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறார்கள். திமுக காரர்கள் சண்டைபோட்டு ஜெயிக்க நினைத்தால் எந்த காலத்திலும் அதிமுகவை ஜெயிக்க முடியாது. அதிமுகவினர் மக்களுக்காக உழைக்க கூடியவர்கள் பணியாற்ற கூடியவர்கள் நீங்கள் எங்களுக்கு வாக்கு அளித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி உங்களுக்காக உழைக்க கூடியவர்கள் அதிமுககாரர்கள் உங்கள் உழைப்பை வைத்து பிழைக்க கூடியவர்கள் திமுக காரர்கள். தொடர்ந்து பேசியவர் எங்களுக்கு எல்லாவிதமான சித்து விளையாட்டுகளும் தெரியும் என்றும் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சற்று அடங்கி போனோம் அதில் ஒரு சில இடங்களில் கொஞ்சம் திமுகவினர் விளையாடி பார்த்தனர். ஆனால் தமிழகத்திலேயே அதிகப்படியான மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற மாவட்டம் விருதுநகர் மாவட்டம் என்று கூறினார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலில் அதிமுக தோற்றது சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தான். ஆனால் வெற்றி பெற்றது ஆயிரம் மற்றும் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுகவின் ஓட்டு சதவீதம் குறையவில்லை. இந்த ஆறு மாதத்தில் அதிமுக வளர்ந்து இருக்கிறது. திமுக தேய்பிறையாகி விட்டது.அதிமுக வளர்பிறையாகி விட்டது. திமுகவை பொருத்தமட்டில் திருட்டு கட்சி மக்களை ஏமாற்றும் கட்சி என்று அமைச்சர் பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.