சிவகாசியில் கட்சி நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஸ்டாலின் நாடகம் எல்லாம் ஒருபோதும் எடுபடாது, ஆணவப் பேச்சை கடைபிடிப்பது ஸ்டாலின் தான் என அனைவருக்கும் தெரியும். சுஜித்தை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள்.
வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு மட்டும் அரசை பாராட்ட மனம் இல்லை. இடைத்தேர்தல் வெற்றியால் அதிமுக உச்சத்தில் இருக்கிறது. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம் இருக்கிறது’ என்று கூறினார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும், விலை உயர்வுக்கு பின்பு ஆவின் பொருள்களை அதிக அளவில் மக்கள் வாங்குகிறார்கள் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு!