விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் தளவாய்புரம் செல்லும் வழியில் அயன் கொல்லங்கொண்டான் விலக்குப் பகுதியில் பறக்கும் படை அலுவலர் பூங்கொடி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஞானகுரு தலைமை காவலர் பிரகாஷ், கண்ணன், ஜெயஜோதி காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனை செய்தபோது தனியார் நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லட்சம் ரூபாய் உரிய ஆவணமின்றி கொண்டுவந்ததைப் பறிமுதல்செய்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஸ்ரீதர் முன்னிலையில் தேர்தல் அலுவலர் கல்யாண்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ரயில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்; காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு!