விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் தங்க பாண்டியன் போட்டியிடுகிறார். இதையடுத்து, ராஜபாளையம் அருகே உள்ள ஆண்டாள்புரம், திருவள்ளுவர் நகர், ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று (மார்ச்.20) நடந்த பரப்புரையின்போது, மக்களிடையே பேசிய அவர், ”மற்ற தொகுதி வேட்பாளர்களைவிட உள்ளூர் வேட்பாளரான என்னை உங்களால் எளிதில் அணுக முடியும். எனக்கு வாக்களியுங்கள். உங்களை அன்போடும் பண்போடும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், ”பகுத்தறிவை முன்மொழியும் திராவிடக் கட்சியில் இருந்து கொண்டு கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பரப்புரை மேற்கொள்கிறார்” என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நடந்து சென்று பதவி பெற்றீர்களா? எடப்பாடிக்கு அழகிரி கேள்வி