ETV Bharat / state

ராஜபாளையத்தை எனது ராஜ ஆலயமாக மாற்ற வாக்களியுங்கள்! - ராஜேந்திர பாலாஜி - Rajapalayam consistuency ADMK Candidate Ktr campaign

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி வாக்குச் சேகரிப்பின்போது, ராஜபாளையத்தை எனது ராஜ ஆலயமாக மாற்றுவேன் எனத் தெரிவித்தார்.

Rajendra Balaji
Rajendra Balaji
author img

By

Published : Apr 4, 2021, 2:23 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஜவகர் மைதானம் பகுதியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காந்தி கலைமன்றம், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாகப் பேரணியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வாக்குச் சேகரித்தனர்.

வாக்குச் சேகரிப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் பரப்புரையின்போது பேசிய அமைச்சர், “எனக்காக வாக்களிக்கும் மக்களுக்கும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்து உங்களது கரங்களை உயர்த்திப் பிடிக்கும் சகோதரனாக இருப்பேன்.
ஜனநாயக நாட்டில் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது. நாம் ஒருமுறை வாக்களித்தால் ஐந்தாண்டு பொறுத்திருக்க வேண்டும். சரியாக வாக்களித்தால் ஐந்து ஆண்டுகள் பெருமைப்பட வேண்டும்.
ராஜேந்திர பாலாஜி ஆன எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என வாக்காளர் பெருமக்களிடம் கரங்கூப்பி, கைக்கூப்பி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் ராஜபாளையத்தை எனது ராஜ ஆலயமாக மாற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் எனவும் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.