விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சார்பில் பொதுமக்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு ஆடி அமாவாசை திருவிழா 20ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144ன்படி தடை உத்தரவானது 31ஆம் தேதிவரை அமலில் உள்ளது.
இதனால் வழிபாடு செய்யும் பொருட்டு சதுரகிரி மலைக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. எனவே தாணிப்பாறை, மாவூத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எதிர் வரும் 19.07.2020 முதல் 21.07.2020வரை பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும்படியும், அந்த உத்தரவினை மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொந்தகை அகழாய்வில் மூன்று எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!