விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய வழக்கில் நரிகுடி காவல் துறையினர் கைது செய்தனர்.
பிரபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கரோனா பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட பின் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறையை நெருங்கியபோது காவல் துறையினர் அசந்த நேரத்தில் பிரபு தப்பியோடிவிட்டார். பின்பு பிரபுவை காவல் துறையினர் விரட்டிச் சென்றபோது அங்கிருந்த பொதுமக்கள் பிரபுவைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி பெயிண்டர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது!