ETV Bharat / state

நல்லெண்ணெய் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்

author img

By

Published : May 16, 2022, 8:08 PM IST

விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை டின் ஒன்றுக்கு ( 15 கிலோ) ரூ.184 வரை உயர்ந்து காணப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நல்லெண்ணை விலை இவ்வளவா? அதிர்ச்சியில் விருதுநகர் மக்கள்

விருதுநகர்: பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில், விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை திடீரென 7 நாட்களில் ( 15 கிலோ) ரூ.184 வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் நல்லெண்ணெய் டின் ஒன்றுக்கு ரூ.4538 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தவாரம் திடீரென விலை உயர்ந்து ரூ.4702 க்கு விற்கப்படுகிறது.

விருதுநகரில் பிரபலபமான எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் நல்லெண்ணெய் விலையை தீர்மானிப்பதில் இந்த நிறுவனங்களே முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பாமாயில் விலை ரூ.110 வரை குறைந்துள்ளது, மேலும் கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.2640க்கு விற்கப்பட்டு வந்தது. இறக்குமதி அதிகரிப்பால் ஒரே வாரத்தில் ரூ.110 சரிவு ஏற்பட்டு ரூ.2530க்கு தற்போது விற்கப்படுகிறது.

இதேபோல் முண்டு வத்தல் கடந்த வாரத்தை விட அதிக அளவில் சந்தைக்கு வந்துள்ள காரணத்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6000 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்த முண்டு வத்தல் இந்த வாரம் ரூ.18 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரையே விற்பனையாகிறது.

மேலும் கடலை எண்ணெய் ரூ.2800, துவரம் பருப்பு ( குவிண்டால்) ரூ.8200, நயம் துவரம் பருப்பு ரூ.9 ஆயிரம், பாசிப்பருப்பு ரூ.8900, லயன் உளுந்து ரூ.7100, பாசிப்பயறு ரூ.8600, பட்டாணி பருப்பு ரூ.5700 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.