கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, சில தளர்வுகளுடன் மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொது போக்குவரத்து இயக்கப்படவில்லை. இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அரசு அனுமதி பெற்று செல்லும் சூழல் உள்ளது. இந்நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகர் மாவட்டம் வருபவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு செய்யப்பட்ட சோதனையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்திருந்த ஒன்பது மாத கர்ப்பிணிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அப்பகுதிகள் முழுவதும் மருத்துவக் குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆயுஷ்மான் பாரத்... 1 கோடியைத் தாண்டிய பயனடைந்தோர்: மோடி பெருமிதம்