விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் மதுமதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மாநில பேரிடர் மீட்புக்குழு மாதிரி ஒத்திகை, செயல்முறை விளக்கப் பயிற்சி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சமூகநலத் துறை செயலாளர் மதுமதி பேசுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றதால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என சென்ற ஆண்டு கண்டறியப்பட்ட 144 இடங்களில் தற்போது 9 இடங்கள் மட்டுமே அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 54 அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 14,000 மணல் மூட்டைகளுடன் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள மாவட்டம் தயாராக உள்ளது. அதே வேளையில் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாகையில் ஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி