விருதுநகர்: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில், முன்பிணை வழங்கக் கோரி கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்தனர்.
இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 17) சென்னை உயர் நீதிமன்றம் அவர்களது முன்பிணை மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே கே.டி. ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே! - ஜெயக்குமாரின் கலகல கண்டன உரை!