விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் ஹபி முகமது (36). இவர் தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்துவந்தார். நேற்று முன்தினம் (பிப். 20) வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் நேற்று (பிப். 21) காலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உறவினர்கள் பல இடங்களில் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில், வீரபாண்டியபுரம் அருகே அரசு மதுக்கடையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஹபி முகமது உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து சாத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் ஹபி முகமதுவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சாத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வைகை அணையில் ஆண் சடலம் மீட்பு!