பசுமை பட்டாசைதான் உற்பத்தி செய்ய வேண்டும்; மக்களும் அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பால், இந்தியாவில் அதிகப்படியான உள்நாட்டு கொள்முதல், உள்ளூர் மற்றும் வெளியூர் விற்பனைக்கு பட்டாசு உற்பத்தி செய்துகொண்டிருந்த சிவகாசி பட்டாசு ஆலை மூடப்பட்டது.
இதனால் ஆலையில் பணியாற்றிவந்த ஊழியர்கள் அனைவரும் வேலையை இழந்து நிற்கதியானார்கள்.
இந்நாள் வரை சிவகாசி பட்டாசு ஊழியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டாசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதில் முக்கிய கோரிக்கையாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் எட்டு லட்சம் பட்டாசு தொழிலாளர்களுக்கு உடனே இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.