விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மாதவராவ். இவர் நுரையீரல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று காலை எதிர்பாராத நிலையில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, இவரது உடல் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காதி போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் லிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் பலரும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.