ETV Bharat / state

பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல் - போலீஸ் அதிரடி

விருதுநகர்: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாயும் தந்தையும் நாடகமாடியது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

child murder
child murder
author img

By

Published : Feb 11, 2020, 6:13 PM IST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசுப் பணியாளர் குடியிருப்பில் வசித்துவருபவர் அமல்ராஜ் (24). இவருக்கும் இவரது மனைவி சுஷ்மிதா (19) என்பவருக்கும் 11 மாதத்தில் விகாஸ் என்ற மகன் இருந்தார்.

இந்நிலையில், சென்ற 5ஆம் தேதி, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விகாஸ் தவறுதலாக மூழ்கிவிட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல் துறையினருக்கு சுஷ்மிதா தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் காரியாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் மகன் இறப்பு தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையைப் பெறுவதற்காகக் கணவன் - மனைவி இருவரும் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகமடைந்த காவல் துறையினர், விசாரிக்க வேண்டிய விதத்தில் தங்களின் விசாரணையை மேற்கொண்டனர். அதில் விகாஸ் உயிரிழப்பு தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சென்ற 2018ஆம் ஆண்டு காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுஷ்மிதா 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரிய லூகாஸ் (50) என்பவரது மகன் அமல்ராஜுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரது காதலின் விளைவாக சுஷ்மிதா கர்ப்பம் தரித்துள்ளார். இதற்கிடையே அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்ததையடுத்து, சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கத்தை (45) அழைத்து விவரங்களைத் தெரிவித்ததுடன், அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைத்து பள்ளியை விட்டும் ஆசிரியர்கள் நிரந்தரமாக வெளியேற்றிவிட்டனர். பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் சுஷ்மிதாவிற்கும் அமல்ராஜுக்கும் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த இடத்தில்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை

இந்தக் குழந்தை எனக்கு பிறந்ததே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளார் அமல்ராஜ். காதலித்து கரம்பிடித்தவரே இவ்வாறு கூறிவிட்டதை ஏற்க முடியாத சுஷ்மிதா, மனவேதனையுடன் இருந்துள்ளார். குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையைப் பார்க்க வரவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா புகார் அளித்துள்ளார். அதனை விசாரித்த காவல் துறையினர், இருவரையும் அழைத்து ஒழுங்காகச் சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வரவே இந்த பிரச்னை மதுரை சரக டிஐஜி காதுகளுக்குச் சென்றுள்ளது. அவர் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைக்க, அவர் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தைப்பொங்கலை ஒன்றாகக் கொண்டாடுங்கள் என்று கூறி அமல்ராஜ் வீட்டிற்கு சுஷ்மிதாவையும், குழந்தையையும் அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகம்; தம்பதி வெறிச்செயல்

ஆனால், பிரச்னை ஓய்ந்தபாடு இல்லை. இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டுமென்றால் குழந்தை இருக்கக்கூடாது என்றும், குழந்தைதான் நமக்குள் பிரச்னை எனவே ஆக வேண்டியதைப் பார் என்றும் சுஷ்மிதாவை அமல்ராஜ் நிர்பந்தித்துள்ளார். இதையடுத்து அமல்ராஜ் முன்னிலையில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சுஷ்மிதா, குழந்தை விகாஸ் தண்ணீரில் விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்ததுடன், கொலையை மறைத்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அமல்ராஜின் பெற்றோரான மரிய லூகாஸ், விமலா (47), சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கம் ஆகியோரையும் சேர்த்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

Intro:விருதுநகர்
11-02-2020

தாய், தந்தை இணைந்து குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலமானது

Tn_vnr_02_father_mother_killed_baby_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ்(வயது24). இவரது மனைவி சுஷ்மிதா(19). இவர்களுக்கு 11 மாதத்தில் விகாஸ் என்ற மகன் இருந்தான். கடந்த 5-ந் தேதி வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விகாஸ் இறந்து கிடந்தான். குழந்தை தவறி விழுந்து இறந்து விட்டதாக சுஸ்மிதா போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மகன் சாவு தொடர்பான முதல் தகவல் அறிக்கையினை பெறுவதற்கு கணவனும் மனைவியும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை விகாசை 2 பேரும் கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்த போலிசார் தாய் மற்றும் தந்தையே குழந்தையை கொன்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சுஷ்மிதாவின் சொந்த ஊர் காரியாபட்டி அருகே உள்ள திருமால்புதுப்பட்டி ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு அவர் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த மரிய லூகாஸ்(50) என்பவரது மகனான அமல்ராஜுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்தது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. கர்ப்பத்துக்கு அமல்ராஜ் காரணம் என தெரிவித்த நிலையில் சுஷ்மிதாவின் தந்தை சூசைமாணிக்கத்தை (45) அழைத்து விவரம் கூறியதோடு சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். பின்னர் இருவர் வீட்டிலும் பேசி சுஷ்மிதாவிற்கும் அமல்ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்கு பிறகு கணவன் -மனைவியிடையே பிரச்சினை எழுந்தது. ஆண் குழந்தை பிறந்த நிலையில் அது தனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து அமல்ராஜ் கூறி வந்துள்ளார். குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை பார்க்க வரவில்லை. இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா புகார் அளித்துள்ளார். விசாரித்த போலீசார், அமல்ராஜை சுஷ்மிதாவிடம் சேர்ந்து வாழசொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வரவே இந்த பிரச்சினை மதுரை சரக டி.ஐ.ஜி. யிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் இருவரிடமும் சமரசபேச்சுவார்த்தை நடத்தி தைப்பொங்கலை முன்னிட்டு சுஷ்மிதாவை அமல்ராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். கைக்குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்தபின்னரும் கணவர் வீட்டார் குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இதனால் குழந்தை மீது சுஷ்மிதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தனது தந்தை சூசைமாணிக்கத்திடம் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமல்ராஜ், சுஷ்மிதாவிடம் குழந்தையினால்தான் பிரச்சினை, எனவே குழந்தை விகாசை கொன்று விடு என்று கூறியதால் அமல்ராஜ் முன்னிலையில் சுஷ்மிதா குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். உடனே இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சுஷ்மிதா இறந்து கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தை விகாஸ் தண்ணீரில் விழுந்து இறந்ததாக கூறியுள்ளார். இந்த திடுக்கிடும் தகவலை கணவனும் மனைவியும் வெளியிட்டதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையை மறைத்ததாக அமல்ராஜுன் பெற்றோரான மரியலூகாஸ், விமலா(47) ஆகியோரும் சுஷ்மிதாவின் தந்தை சூசைமாணிக்கமும் கைது செய்யப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.