விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே அவ்வூரில் நடைபெறும் தேசிய அம்மன் கோயில் வழிபாட்டையொட்டி, கடந்த ஆறு ஆண்டுகளாக மோதல்கள் தொடர்ந்து வந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தின் வடக்கு தெரு முன்னாள் ஊர் நாட்டாமையாக இருந்த தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பந்தமாக தளவாய்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், பால்பாண்டி என்பவரைத் தவிர, புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம், குமார், பால்பாண்டி, ராமராஜ், அண்ணபிரகாஷ், பாலகிருஷ்ணன், சந்திரசேகர், ரமேஷ் முத்துக்குமார், ராமசாமி, சக்திவேல் உள்ளிட்ட பத்து பேரை இன்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது