ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இன்று (செப்.12) ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுபினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிற்கு சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கழுதைப் பால்: சேலத்தில் விற்பனை அமோகம்!