விருதுநகர் மாவட்ட சதுரங்க சங்கமும், விருதுநகர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஓப்பன் செஸ் போட்டியானது, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநில அளவிலான இந்தப் போட்டியில் மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், சேலம், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 6 வயது முதல் 60 வயது வரையுள்ள போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இரு பாலரும் கலந்துகொண்ட இந்தப் போட்டி ஆறு பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் வருகிற மே, ஜுன் மாதங்களில் நடைபெறவுள்ள நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு சதுரங்க அணி சார்பாக பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவில் இத்தனை உசைன் போல்ட்டா? ஸ்ரீநிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர்!