விருதுநகர் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கண்காணிப்பு குழுவினர் மருந்துப் பொருள்கள், முகக் கவசம், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்தும், அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், விருதுநகர் ஊரக, நகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து பேக்கரி, உணவகங்கள், மருந்தகங்கள், பழக்கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விருதுநகர் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள பழக்கடை ஒன்றில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அக்கடையிலிருந்த 150 கிலோ மாம்பழங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான பழங்களை விற்பனை செய்ததற்காக பழக்கடைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: தடியடி நடத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பழக்கடை வியாபாரிகள்!