விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து, கரும்பு, விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சாதி உணர்வு மட்டும் உள்ளது. ஆனால், மொழி உணர்வு எட்டப்படவில்லை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ் மொழி. நம் இனத்தின் மக்கள் தொகை கொண்ட சாதி, மாதத்தால் பிரிந்து விட்டேம். மாற்று அரசியல், புரட்சி மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி, நாம் தமிழர் கட்சி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி, கிரைண்டர், டிவி எதுவும் இலவசம் கிடையாது. அதற்கு மாற்றாக தரமான கல்வி, மருத்துவம் போன்ற தரமான வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்குவோம். என் மக்கள் தன்மானமாக வாழ வைக்க விரும்புகிறேன். இலவசம் தரும் அதிமுக, திமுக, நீங்கள் என்ன ஜமீந்தார் திவானா? உங்கள் காசையா இலவசமாகக் கொடுக்கிறீர்கள்?
மாதம், மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். அதற்கு பதில் நாங்கள் 2,500 ரூபாய் கொடுக்கிறோம். நீங்கள் நல்ல தரமான கல்வியும் சுகாதாரமான குடிநீரும் எங்களுக்கு கொடுங்கள். நல்ல தலைவர்கள் முன்னர் இருந்தனர். காமராஜர், ”நான் படிக்கவில்லை, என் பிள்ளைகள் படிக்க வேண்டும்” எனக் கூறி பல பள்ளிக்கூடங்களைத் திறந்தார். படிக்காத தலைவர் பள்ளிக் கூடங்கள் திறந்து வைத்து படிக்க வைத்தார். அதற்குப் பின் வந்த இவர்கள், டாஸ்மாக் கடை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க...திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்