விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமக்காக உருவாக்கப்பட்டது. இதை யாரும் கேட்பதற்கு அதிகாரம் கிடையாது. இது நம் நாட்டின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது. விரோதிகள் யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று நாம் சொல்லலாம்.
அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். கோழை மாதிரி ஒளிந்துகொண்டு நேருக்கு நேர் வராமல் நம்மளுடைய சட்டத்திட்டங்களை மதிக்காமல் இருக்கிறார். அவர் தேசத்தை மதிக்காததால் அவரை தேசத்துரோகி என்று கூறலாம்" என்றார்.
இதையும் படிங்க: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்!