ETV Bharat / state

புதிய கெட்டப்பில் நீதிமன்றம் வந்த நிர்மலா தேவி! - மொட்டையடித்து வந்தார்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடுக்கப்பட வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி வழக்கத்திற்கு மாறாக மொட்டையடித்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.

nirmala devi
author img

By

Published : Aug 5, 2019, 4:57 PM IST

Updated : Aug 5, 2019, 6:28 PM IST

கல்லூரி உதவி பேராசிரியை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு 2018ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நிர்மலா தேவி தனது தலைமுடியை வெட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்திலேயே தியானம் மேற்கொண்டார்.

நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி

இதனைத்தொடர்ந்து வழக்கறிஞரின் சமாதானத்தின்பேரில் அருப்புக்கோட்டை சென்ற நிர்மலா தேவி, அங்குள்ள தர்காவில் தனது தியானத்தைத் தொடர்ந்தார். அவரது நடவடிக்கைகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நிர்மலா தேவி வரும்போது வழக்கத்திற்கு மாறாக மொட்டையடித்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Intro:விருதுநகர்
05-08-19

நிர்மலாதேவி வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து அதிகம் நீதிமன்றத்தில் ஆஜர்Body:ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ஆஜர்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி ஆஜரானார் கடந்த வருடம் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்க்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியர் நிர்மலா தேவி புத்தி பேதலித்து போல் நடந்து கொண்டு தலைமுடியை வெட்டி நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்து நீதிமன்ற வளாகத்திலேயே தியானம் மேற்கொண்டார். தொடர்ந்து வழக்கறிஞர் சமாதானத்தின் பேரில் அருப்புக்கோட்டை சென்ற பேராசிரியை அங்கு உள்ள தர்காவிலும் தனது தியானத்தைத் தொடர்ந்தார் அவரின் நடவடிக்கைகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலாதேவி வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து வந்திருந்தார் .இன்று ஆஜராக வேண்டிய உதவி பேராசிரியர் முருகனைத் தவிர ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் இன்று ஆஜரானார் வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பாரி ஆகஸ்ட் 19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் அதனை தொடர்ந்து நிர்மலா தேவி காரில் புறப்பட்டு சென்றார் முன்னதாக தான் ஒரு நிர்மலா தேவியின் ரசிகன் எனக்கூறி வந்த தேனியைச் சேர்ந்த அன்பழகன் இன்றும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
Last Updated : Aug 5, 2019, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.