ETV Bharat / state

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சிவகாசி கல்லூரியில் தொடங்கப்பட்ட புதிய வசதி! - CSIR NEERI அமைப்பு

பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் பட்டாசுகளை பரிசோதனை செய்ய சிவகாசியில் புதிதாக ஆய்வுக்கூடம் துவங்கப்பட்டுள்ளது.

new laboratory has been opened for firecrackers
சிவகாசி கல்லூரியில் தொடங்கப்பட்ட புதிய வசதி
author img

By

Published : Mar 31, 2023, 2:17 PM IST

பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் பட்டாசுகளை பரிசோதனை செய்ய சிவகாசியில் புதிதாக ஆய்வுக்கூடம் துவங்கம்

விருதுநகர்: சிவகாசி ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 30.03.2023 அன்று CSIR - NEERI கட்டுப்பாட்டில் இயங்கும் RACE எனப்படும் பட்டாசு மூலப்பொருட்களின் தன்மை மற்றும் உமிழ்வு சோதனை செய்யும் ஆராய்ச்சி கூடம் மாவட்ட ஆட்சியாளர் உயர்திரு ஜெயசீலன் மற்றும் CSIR - NEERI இயக்குனர் அதுல் வைத்தியா அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது.

இந்த விழாவில் பட்டாசு உற்பத்தியாளர்கள், CSIR - NEERI குழுமத்தினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். டான்ஃபாமா குழுமத்தின் தலைவர் கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். பட்டாசு தொழிற்சாலைகளுக்கு அவசியமான முன் பதிவு செய்தல், உமிழ்வு சோதனை செய்தல் மற்றும் இரைச்சல் ஒலி சோதனை செய்தல் ஆகியவற்றை பூர்த்தி செய்ய இந்த ஆய்வுக்கூடம் உறுதுணையாக இருக்கும். மேலும் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்படுதலின் சிறப்பம்சம் குறித்தும் இதற்கென CSIR - NEERI அமைப்பு வழங்கிய ஒத்துழைப்பு குறித்தும் எடுத்துக் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "இந்த ஆய்வுக் கூடத்தை அமைத்துக் கொடுத்த CSIR - NEERI அமைப்பிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த இந்த ஆய்வகத்தை முறையாக பயன்படுத்தி சிவகாசி நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகிய இரண்டையும் நாம் பேணி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தற்போது சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களும் இந்த ஆய்வகத்தின் தரச்சான்று பெற்று பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து இந்தியா முழுமைக்கும் சுற்றுச்சூழலை பேணி காத்திடும் வகையில் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.

CSIR - NEERI இயக்குனர் பேசுகையில், "இந்த ஆராய்ச்சி கூடத்தின் நோக்கம் அரசு நிர்ணயத்த விதிமுறைகளின் படி பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா? என்பதை பரிசோதிப்பது ஆகும். எனவே பட்டாசு தொழிற்சாலைகள் இனி தங்கள் தரத்தை பரிசோதிக்க நாக்பூர் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

அதன் பின்னர், CSIR - NEERI அமைப்பின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சாதனா ராயலு இந்த ஆய்வக கூடம் செயல்பாடு மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடு வெளியிட்டு அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் அறிக்கையில், "இந்த ஆய்வகத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்டாசு மாதிரிகளின் உமிழ்வு அளவு மற்றும் இரைச்சல் ஒலி அளவு ஆகியவற்றை ஆராய்ந்து தேர்ச்சி பெரும் பட்டாசு மாதிரிகளுக்கு பசுமை பட்டாசு சின்னம் வழங்கப்படும். இவ்வாறாக அனுமதி வழங்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு QR CODE வழங்கப்பட்டு அவற்றில் CSIR - NEERI-யின் அங்கீகாரம் மற்றும் உற்பத்தியாளர் தகவல்கள் ஆகியவை சேர்க்கப்படும்" எனக் கூறினார்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் பட்டாசுகளை பரிசோதனை செய்ய இனி தொலைதூரம் பயணிக்க வேண்டியது இல்லை. சிவகாசியில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் தங்கள் பட்டாசுகளை பரிசோதித்து கொள்ளலாம். எனவே இந்த ஆய்வுக்கூடம் சிவகாசி நகர பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: India Coronavirus Cases: கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.