விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி கிராமத்தில் சுமார் 3,500 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இங்கிருக்கும் மாணவர்களின் நலனுக்காக, மக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால், இந்நாள் வரை அதனை மாவட்ட நிர்வாகம் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
புதிதாகக் கட்டப்பட்ட இக்கட்டடம் பல ஆண்டுகள் திறக்கப்படாததால் பாழடைந்து புதர் மண்டிகளாகக் காணப்படுகிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகக் கிராம வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். விரைவில் ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நூலகத்தைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் மலைப்பாதையில் பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர்கள்!