விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையானது அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. பல்வேறு வனவிலங்குகள் வசித்துவரும் இடமாகவும் இருந்துவருகிறது.
குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து உள்ளிட்ட பகுதிகள் கேரளா எல்லையில் அமைந்துள்ளன. தற்போது மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.
இங்கு நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து நெல்லை மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு அலுவல் பிரிவினர் 20க்கும் மேற்பட்டோர் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சந்தேகப் படும்படியாக மலை அடிவாரத்தில் சுற்றித் திரியும் நபர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் தொடர்பு எண்ணையும் வாங்கிவருகின்றனர். நக்சலைட்டுகள் குறித்து வந்த தகவல் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க...கொடைக்கானலில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை