ETV Bharat / state

சந்திரயான் 2... முன்னேற்ற பாதையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்: டான் தாமஸ் - சந்திராயன் 2

விருதுநகர்: இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நன்மைதரும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

டாக்டர். டான் தாமஸ்
author img

By

Published : Sep 3, 2019, 8:38 AM IST

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனில் காலடிவைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன் விழாவைக் கொண்டாடிவருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ், தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்குச் சென்று தன்னுடைய விண்வெளி அனுபவங்களை பள்ளிக் கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்துவருகிறார்.

அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டான் தாமஸ் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இதில் தன்னுடைய விண்வெளி பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களையும் கூறினார்.

முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் பேட்டி

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த டான் தாமஸ், “தற்போது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவது இஸ்ரோவுக்கு மட்டுமின்றி நாசாவிற்கும் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்மைதரும்.

இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்குவது இந்தியாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் சந்திராயன் 2 மூலம் இந்திய மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இஸ்ரோ சிறந்த அளவில் ஊக்கமும் பயிற்சியும் அளித்துவருகிறது. எதிர்காலத்தில் நிலவு மட்டுமின்றி செவ்வாய் குறித்து ஆராய்ச்சி செய்யவும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக அளவில் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Intro:விருதுநகர்
02-09-19

இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நன்மை தரும் - நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர். டான் தாமஸ் பேட்டிBody:விருதுநகர்
02-09-19

இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நன்மை தரும் - நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர். டான் தாமஸ் பேட்டி

இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவது இஸ்ரோவுக்கு மட்டுமின்றி நாசா மற்றும் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நன்மை தரும் - நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர். டான் தாமஸ் பேட்டி

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனில் காலடி வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது பொன் விழாவை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவினத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர். டான் தாமஸ் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று தன்னுடைய விண்வெளி அனுபவங்களை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுடன்
பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர். டான் தாமஸ் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் தன்னுடைய விண்வெளி பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டாக்டர். டான் தாமஸ் தற்போது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவது இஸ்ரோவுக்கு மட்டுமின்றி நாசா மற்றும் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நன்மை தரும் எனக் கூறிய டான் தாமஸ்
இஸ்ரோவின் சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்குவது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் இந்த வெற்றியின் மூலம் சந்திராயன் 2 மூலம் இந்திய மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல எதிர்காலம் இருக்கிறது எனக் கூறிய டான் தாமஸ்
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் களுக்கு இஸ்ரோ சிறந்த அளவில் ஊக்கமும் பயிற்சியும் அளித்து வருகிறது இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ளது எனவும்
எதிர்காலத்தில் நிலவு மட்டுமின்றி செவ்வாயை பற்றி ஆராய்ச்சி செய்யவும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக அளவில் வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்

பேட்டி - டான் தாமஸ் ( அமெரிக்க நாசா முன்னாள் விண்வெளி வீரர்) Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.