ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கம் சிலையும், அதன் கோபுரத்தில் முருகன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முருகன் சிலையை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதில், அதன் தலைப்பகுதி உடைந்து கிடந்தது. இதையடுத்து அங்கு வந்த
ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் மற்றும் வட்டாட்சியர், உடனடியாக உடைக்கப்பட்ட சிலைக்குப் பதில் வேறு சிலையை வைத்தனர். மேலும், 3 சிசிடிவி கேமராக்களும் அங்கு பொருத்தப்பட்டன.
மேலும், சிலையை உடைத்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதால் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்றம் தணிந்தது. எனினும் அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் இளைஞருக்கு சரமாரி வெட்டு - போலீசார் விசாரணை!