விருதுநகர்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப் பாண்டியனின் தாயார் ராஜாமணி நேற்றிரவு காலமானார். அவரின் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குடும்பத்துடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மலர்வளையம் வைத்து மரியாதை செய்தபோது, மு.க. அழகிரியும், அவரது துணைவியாரும் கண்ணீர்விட்டு கதறியழுதனர்.
இதேபோல், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி, தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப்பாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
![mu ka alagiri homage thangam thennarsu mother](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9057919_suvengatesan.jpg)
இதையும் படிங்க: தங்கம் தென்னரசு தாயார் மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்