விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு (அக்.18) அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய ராஜவர்மன், அதிமுக சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் என அதிர்ச்சிக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் இன்று (அக்.19) இது குறித்து காங்கிரஸ் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க...கொலை மிரட்டல் விடுக்கும் அமைச்சர்- கட்சிக் கூட்டத்தில் போட்டுடைத்த எம்எல்ஏ!