விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் கரோனாவை கண்டறிய பரிசோதனைகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு காங்கிரஸ் செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கோரிக்கைவிடுத்தார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட காணொலியில், “விருதுநகரில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.
சென்னையை போன்று தென் மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து விடாமல் தடுப்பதற்கு அதிக அளவிலான கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், டெல்லியை போல துரிதமாக கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடும் ராபிட் ஆன்டிஜென் சோதனையை செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.
முன்னதாக இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆயிரம் படுக்கைகள் தான் உள்ளன. இந்த நோய் பரவல் திடீரென்று அதிகரித்தால் இந்த படுக்கை வசதிகள் போதாது. ஆகவே மேலும் கூடுதலாக 4,000 படுக்கை அமைத்து தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் ஊரடங்கு தொடரும்!