ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ’மெகா லோக் அதாலத்’

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ’மெகா லோக் அதாலத்’
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ’மெகா லோக் அதாலத்’
author img

By

Published : Apr 11, 2021, 8:13 AM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது. நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஏராளமான சிவில், கிரிமினல், விபத்துக் காப்பீட்டு வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக ’லோக் அதாலத்’ நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நேற்று (ஏப்.10) ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் மூன்றாயிரத்து 654க்கும் மேற்பட்ட வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் ஆயிரத்து 537 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தொடர்ந்து, நேற்றைய லோல் அதாலத்தில் சுமார் ஐந்து கோடியே 81 லட்சம் மதிப்பிலான தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா வழங்கினார். மேலும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் நான்கு பேருக்கு அறிவுரைகள் கூறி சமரசம் செய்து நீதிபதிகள் சேர்த்து வைத்தனர்.

கரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு இந்த லோக் அதாலத் வழக்குகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

லோக் அதாலத் என்றால் என்ன?

மக்கள் நீதிமன்றம் என்பதே ’லோக் அதாலத்’ என்பதன் பொருள். இது சமாதானம், சமரசம் ஆகியவற்றின் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதிமன்றங்களுக்கு அனுப்பலாம். மக்கள் நீதிமன்றம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதிதான் முதலில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரூர் வழியாக இயக்கப்படும் பாலக்காடு ரயில் சேவை இரண்டு நாள்கள் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.