ETV Bharat / state

முதலமைச்சருக்கு கரோனாவே அஞ்சுகிறது: ராஜேந்திர பாலாஜி - அம்மா உணவகம்

விருதுநகர்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அச்சப்படும் அளவிற்கு வெளிப்படையான நிர்வாகத்தை எடப்பாடி பழனிச்சாமி வழங்கிவருவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

minister-rajendra-bhalaji-gave-rs-dot-8-60-lakhs-to-district-collector

author img

By

Published : Apr 23, 2020, 12:02 PM IST

நாளை முதல் மே 3ஆம் தேதிவரை 11 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க ரூபாய் 8 லட்சத்து 60 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பணியாற்றி வருகிறோம். அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு எடப்பாடி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வுதான் முக்கியக் காரணம். மருத்துவர்கள் இறைவனின் தொண்டர்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். கரோனா வைரஸால் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கான நிவாரண உதவியை 10 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும், இதுவரை எந்த ஒரு அத்தியாவசியப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அந்த அளவிற்கு அரசு மக்களைப் பாதுகாத்து வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அச்சப்படும் அளவிற்கு வெளிப்படையான நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். பிரச்னையை உருவாக்கக் கூடியவர்கள் பற்றி கவலை இல்லை. ஏனென்றால் பிரச்னையைத் தீர்க்கக்கூடியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.