ETV Bharat / state

''திமுகவினரின் சட்டையை கிழிங்க, வீட்டு கதவை உடைங்க" - அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு! - minister rajendra balaji controversial speech viral

விருதுநகர்: தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால் திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டு கதவை திமுகவினர் தட்டினால் திமுகவினரின் வீட்டு கதவை உடைக்க வேண்டும். இதுதான் நமது கொள்கை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

minister
author img

By

Published : Nov 18, 2019, 8:59 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ''எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரின் புகழை பேசக்கூடியவர்களுக்கு அதிமுகவில் வாழ்வு உண்டு, வசதி வாய்ப்புகள் உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற என்ன வழி உள்ளதோ அனைத்து சித்து விளையாட்டுகளையும் விளையாடுவேன். தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால் திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டு கதவை திமுகவினர் தட்டினால் திமுகவினரின் வீட்டுக்கதவை உடைக்க வேண்டும். இதுதான் நமது கொள்கை.இதன் மூலம் எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

ராஜேந்திர பாலாஜியின் சர்சைப் பேச்சு

எனது 16 வயது முதல் ஆரம்பித்த நீதிமன்ற வழக்குகள் இன்றும் உள்ளது. எதைப்பற்றியும் நான் கவலைப்படமாட்டேன். கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்று சப்பாத்தி, பரோட்டா, நாட்டுக்கோழி சாப்பிட்டு படுத்து உறங்குகின்றனர். திமுகவிற்கு இனி வாழ்வே கிடையாது. அரசியல் அங்கீகாரமும் கிடையாது.

மிகப்பெரிய ஜாம்பவான் கருணாநிதியால்கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை. அவரது மகன் ஸ்டாலினா அழிக்க போகிறார், அது முடியவே முடியாது” என்றார்.

இதையும் படிங்க: ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சத்தியநாராயணன் அமர்வு விசாரிக்க உத்தரவு

Intro:விருதுநகர்
18-11-19

அதிமுகவினரின் சட்டையை தொட்டால் திமுக காரர்களின் சட்டையை கிழிக்க வேண்டும். நம்ம வீட்டு கதவை திமுக வினர் தட்டினால் திமுக வினரின் வீட்டு கதவை உடைக்க வேண்டும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு

Tn_vnr_01_rajenthira_balaji_speech_vis_script_7204885Body:தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால் திமுக காரர்களின் சட்டையை கிழிக்க வேண்டும் எனவும், நம்ம வீட்டு கதவை திமுக வினர் தட்டினால் திமுக வினரின் வீட்டு கதவை உடைக்க வேண்டும் இதுதான் நமது கொள்கை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடந்த அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் ஆகியோரின் புகழை பேசக் கூடியவர்களுக்கு அதிமுகவில் வாழ்வு உண்டு,வசதி வாய்ப்புகள் உண்டு என தெரிவித்தார்.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற என்ன வழி உள்ளதோ அனைத்து சித்து விளையாட்டுகளையும் விளையாடுவேன் எனவும் மேலும் தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால் திமுக காரர்களின் சட்டையை கிழிக்க வேண்டும் எனவும், நம்ம வீட்டு கதவை திமுகவினர் தட்டினால் திமுகவினரின் வீட்டு கதவை உடைக்க வேண்டும் இதுதான் நமது கொள்கை எனவும் அடுத்து எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என பேசினார்.
தனது 16 வயது முதல் ஆரம்பித்த நீதிமன்ற வழக்குகள் இன்றும் உள்ளது, எதைப்பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சார்பில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்று சப்பாத்தி, புரோட்டா, நாட்டுக்கோழி சாப்பிட்டு படுத்து உறங்குகின்றனர் திமுகவிற்கு வாழ்வே இனி கிடையாது, அரசியல் அங்கீகாரம் கிடையாது என திமுகவை விமர்சித்தார்.‌ மிகப் பெரிய ஜாம்பவானான கலைஞராலயே அதிமுகவை அழிக்க முடியவில்லை அவரது மகன் ஸ்டாலினா அழிக்க போகிறார் அது முடியவே முடியாது என அமைச்சர் பேசினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.