ராஜபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ” புயல் பாதித்த பகுதிகளிலும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்துள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் பாதுகாப்பு கவசம் அணிந்து, முதல்வரை பார்த்து வேறு வழியின்றி நேரில் சென்று பார்வையிடுகிறார். அது சேவை அல்ல. தேர்தல் வருகிறது என்கிற தேவையால் பார்வையிட்டுள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. யார் உண்மையாகவே வேலை செய்கிறார்கள், யார் நடிக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, மக்கள் சரியான நேரத்தில் சரியான பதிலடி கொடுப்பார்கள் “ என்றார்.
இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு