விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாவாடித்தோப்பு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகமது சபீக் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்தும் வகையில் சங்பரிவார கருத்துகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாகவும் அவருடைய அமைச்சர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தினார். மேலும், மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் நடந்துகொள்வதாகவும் இந்து, இஸ்லாமியர்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: கஞ்சா கடத்திய இருவர் கைது - ஏழு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!